திறனாய்வு தேர்வை 1.5 லட்சம் பேர் எழுதினர்

திறனாய்வு தேர்வை 1.5 லட்சம் பேர் எழுதினர்

உயர்கல்வி ஊக்கத்தொகைக்கான தேசிய திறனாய்வுத் தேர்வை தமிழகம் முழுவதும் 1.55 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்தில் மொத்தம் 450 மையங்களில் நேற்று காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்த இத்தேர்வை 1.55 லட்சம் பேர் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில், 27 இடங்களில் இந்தத் தேர்வு நடந்தது. இந்தத் தேர்வில் தேர்ச்சியடைபவர்கள் அகில இந்திய அளவிலான தேர்வுக்கு தகுதி பெறுவர். அகில இந்திய தேர்வில் வெற்றி பெறும் 2 ஆயிரம் பேர் உயர்கல்விக்கான ஊக்கத்தொகைக்கு தகுதி பெறுவார்கள். அவர்களுக்கு 12-ம் வகுப்பு வரை மாதந்தோறும் ரூ.1,250-ம், இளநிலை, முதுநிலை படிப்புக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரமும் வழங்கப்படும். இந்த உதவித்தொகை பிஹெச்டி படிப்புக்கும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Comments