நவ., 17ல் ஆர்ப்பாட்டம் : ஆசிரியர்கள் அறிவிப்பு

நவ., 17ல் ஆர்ப்பாட்டம் : ஆசிரியர்கள் அறிவிப்பு

அகவிலைப்படி உயர்வுக் கோரி, தமிழகம் முழுவதும், நவ., 17ல், ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் அறிவித்து உள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழக தலைவர்,கே.பி..சுரேஷ் கூறியதாவது:மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வுக் கோரி, மனுக்கள் அளித்துள்ளோம்;அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே, எட்டாவது ஊதியக் குழுவை ஏற்படுத்துதல், அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படியை இணைத்தல், தேர்வு பணிகளுக்கு உழைப்பு ஊதியத்தை அதிகரித்தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி,நவ., 17ல், ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன், இந்த ஆர்ப்பாட்டம் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Comments