திருமண செலவுகளுக்காக ரூ.2½ லட்சம் எடுக்கும் திட்டம் 2 நாட்களில் அமல் வங்கிகள் தகவல்

திருமண செலவுகளுக்காக ரூ.2½ லட்சம் எடுக்கும் திட்டம் 2 நாட்களில் அமல் வங்கிகள் தகவல் | ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் வங்கிகளில் இருந்து பணம் எடுக்க பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ள நிலையில், திருமண செலவுகளுக்காக ரூ.2½ லட்சம் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. மணமகன் அல்லது அவரது பெற்றோரோ, மணமகள் அல்லது அவரது பெற்றோரோ வங்கியில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தங்கள் கணக்கில் இருந்து இந்த பணத்தை எடுக்க முடியும்.இந்த அறிவிப்பு கடந்த வாரமே வெளியிடப்பட்டாலும் அது தொடர்பான ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகள் எதுவும் வங்கிகளுக்கு இன்னும் வந்து சேரவில்லை. எனவே இந்த ரூ.2½ லட்சம் பணம் எடுக்கும் திட்டத்தை தங்களால் செயல்படுத்த முடியவில்லை என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழிகாட்டு நெறிமுறைகள் திங்கட்கிழமை (நாளை) வரும் என எதிர்பார்ப்பதாக கூறிய அவர்கள், அவ்வாறு வந்தால் 2 நாட்களில் அதாவது (செவ்வாய்க்கிழமை) முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.

Comments