SCROL

Thursday, November 10, 2016

வருமான அளவை மீறி வங்கியில் டெபாசிட் செய்தால் ஆபத்து வரியுடன் 200 சதவீத அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிப்பு

வருமான அளவை மீறி வங்கியில் டெபாசிட் செய்தால் ஆபத்து வரியுடன் 200 சதவீத அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிப்பு

வருமான அளவை மீறி வங்கியில் டெபாசிட் செய்பவர்களுக்கு வருமான வரியுடன் 200 சதவீத அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு திடீரென அறிவித்துள்ளது.ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்றுமுன்தினம் அறிவித்தார். அந்த நோட்டுகளை இன்று முதல் டிசம்பர் 30-ந் தேதிவரை, வங்கி கணக்கில் உச்ச வரம்பு எதுவும் இல்லாமல் செலுத்தலாம் என்றும் அறிவித்தார். அதனால், நேற்றைய விடுமுறைக்கு பிறகு இன்று வங்கிகள் திறக்கும்போது, கணக்கில் பணம் செலுத்த மக்கள் தயாராக இருந்தனர்.இந்நிலையில், மத்திய அரசு நேற்று இரவு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. வருமான அளவை மீறி பணம் செலுத்தினால், வரியுடன் அபராதம் செலுத்த நேரிடும் என்று அறிவித்தது. இதுகுறித்து மத்திய வருவாய்த்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா கூறியதாவது:- டிசம்பர் 30-ந் தேதிவரை வங்கிகளில் ரூ.2½ லட்சத்துக்கு மேல் யார் யார் டெபாசிட் செய்கிறார்களோ, அவர்களின் விவரங்களை கேட்டுப் பெறுவோம். அவர்கள் டெபாசிட் செய்த தொகையை, அவர்கள் ஏற்கனவே தாக்கல் செய்த வருமான வரி கணக்குடன் ஒப்பிட்டு பார்ப்போம். அவர்கள் டெபாசிட் செய்த தொகை, அவர்களின் வருமான அளவுக்கு பொருந்தாத வகையில் இருந்தால், அது வரி ஏய்ப்பாக கருதப்படும்.

No comments:

Post a Comment