SCROL

Tuesday, November 15, 2016

பேருந்து, ரயில், மருத்துவமனைகள், பெட்ரோல் நிலையங்களில் நவ. 24 வரை ரூ.500, 1000 நோட்டுகள் செல்லும் மின் கட்டணம், அரசு வரிகளையும் செலுத்தலாம்

பேருந்து, ரயில், மருத்துவமனைகள், பெட்ரோல் நிலையங்களில் நவ. 24 வரை ரூ.500, 1000 நோட்டுகள் செல்லும் மின் கட்டணம், அரசு வரிகளையும் செலுத்தலாம் | பேருந்து, ரயில், விமான டிக்கெட் முன்பதிவு மையங்கள், அரசு மருத்துவமனைகள், கூட்டுறவு விற்பனை நிலையங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் வரும் 24-ம் தேதி வரை பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் சொத்து வரி, மின் கட்டணம் உள்ளிட்ட அரசு கட்டணங் களை செலுத்தவும் பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ம் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார். எனினும் மக்களின் அவசர தேவை களைக் கருதி அரசு மருத்துவ மனைகள், ரயில், விமான நிலையங்கள், பால் பூத்கள், இடுகாடுகள், பெட்ரோல் பங்க்கு களில் பழைய ரூபாய் நோட்டுகளை 11-ம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. மெட்ரோ ரயில் டிக்கெட், மருந் துகள், சமையல் எரிவாயு, ரயில் களில் உணவுகள், மின் கட்டணம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து வரிகள், அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள், நீதிமன்ற கட்டணம், இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள நினை விடங்களில் கட்டணம் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் பொருட்கள் வாங்குவதற்கும் பழைய நோட்டுகளை பயன்படுத்த லாம் என்றும் அறிவிக்கப் பட்டது. புதிய நோட்டுகள் மாற்றுவதற் காக வங்கிகளில் கடந்த 5 நாட்களாக கூட்டம் அலைமோதுகிறது. பெரும் பாலான ஏடிஎம்களும் செயல்பட வில்லை. இதனால், மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, அத்தியாவசிய தேவைகளுக்கு பழைய நோட்டு களை பயன்படுத்த கடந்த 14-ம் தேதி வரை அனுமதி நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகும் வங்கிகளில், ஏடிஎம் மையங்களில் கூட்டம் குறையவில்லை. பொதுமக்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். அவசர ஆலோசனை இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசர ஆலோசனை நடத்தப் பட்டது. இதையடுத்து பேருந்து, ரயில், விமான நிலைய முன்பதிவு மையங்கள், கூட்டுறவு விற்பனை நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் சொத்து வரி, மின் கட்டணம் உள்ளிட்ட அரசு கட்டணங்களைச் செலுத்த வரும் 24-ம் தேதி வரை பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. வங்கிகளில் பணம் மாற்றுவது ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.4,500 ஆகவும், வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான ஒரு வார உச்சவரம்பு ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரமாகவும் அதிகரிக் கப்பட்டுள்ளது. காசோலை மூலம் ஒரே நாளில் ரூ.24 ஆயிரம் வரை எடுக்கலாம். இதற்கு முன்பு ரூ.10 ஆயிரம் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. மைக்ரோ ஏடிஎம் வங்கிகளில் பழைய நோட்டு களை மாற்ற மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளி களுக்கு தனி வரிசை ஏற்பாடு செய்யப்படும். கிராமங்களில் ரூபாய் நோட்டுகளை விநியோ கிக்க ஏராளமான மைக்ரோ ஏடிஎம் வசதிகள் ஏற்படுத்தப்படும். தற்போது தலைமை தபால் நிலை யங்களில் மட்டும் பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றப்படுகின்றன. இன்று முதல் கிளை தபால் நிலையங்களிலும் பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றப்படும். வங்கி களில் நடப்பு கணக்கு வைத்துள்ள வர்த்தக நிறுவனங்கள் ரூ.50 ஆயிரம் வரை எடுத்துக் கொள்ள லாம் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும் காலக்கெடு ஜனவரி 15-ம் தேதி வரை நீட்டிக் கப்பட்டுள்ளது என்று மத்திய பொருளாதார விவகாரங்களுக் கான செயலாளர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். மத்திய அரசின் மேற்கண்ட அறிவிப்புகளால் இன்று முதல் வங்கிகள், ஏடிஎம் மையங் களில் படிப்படியாக கூட்டம் குறையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஏடிஎம்களில் ரூ.2,000 ஏடிஎம்களில் இதுவரை புதிய 2,000, 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்கவில்லை. இந்நிலையில், ஏடிஎம் மையங்களில் இன்று முதல் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 500 ரூபாய் நோட்டுகள் இதுவரை ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல அலுவலகத்துக்கு வந்து சேரவில்லை. இன்று மாலை வந்து சேரும் என்று எதிர்பார்க் கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. சுங்கச்சாவடி கட்டணம் 18-ம் தேதி வரை ரத்து தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வரும் 18-ம் தேதி நள்ளிரவு வரை கட்டணம் கிடையாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சில்லறை தட்டுப்பாட்டால், சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டு நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பல இடங்களில் சுங்கச்சாவடிகளில் இருந்த ஊழியர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் நவம்பர் 11-ம் தேதி வரை கட்டணம் வசூலிக்கப்படாது என மத்திய அரசு அறிவித்தது. பின்னர், இது நவம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டது. வங்கிகள், ஏடிஎம் மையங்களில் கூட்டம் அலைமோதுவதால் சுங்கச்சாவடி கட்டண ரத்தை மேலும் சில நாட்கள் நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இந்நிலையில், மத்திய அரசு நேற்று வெளி யிட்டுள்ள அறிவிப்பில், 'அனைத்து தேசிய நெடுஞ் சாலைகளிலும் மக்கள் இடையூறின்றி பயணம் செய்யும் வகையில் நவம்பர் 18- தேதி நள்ளிரவு 12 மணி வரை கட்டணம் வசூலிக்கப்படுவது நிறுத்தி வைக்கப்படுகிறது. இதற்கான இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு செலுத்தும்' என்று கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவிப்பு

No comments:

Post a Comment