அரசு பிறப்பித்த 2 ஆணைகள் செல்லும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் அனைத்து இட ஒதுக்கீட்டு பிரிவின ருக்கும் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கியும், பணி நியமனத்தின்போது வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படும் எனவும் கூறி தமிழக அரசு கடந்த 2014-ல் 2 அரசாணைகளை வெளியிட்டது. ஆனால், இந்த மதிப்பெண் சலுகையை எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு மட்டுமே வழங்க வேண்டும். இதர அனைத்து பிரிவினருக்கும் வழங்கக் கூடாது. வெயிட்டேஜ் முறையைப் பின்பற்றக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்திலும், மதுரை உயர் நீதிமன்ற கிளையிலும் வழக்குகள் தொடரப்பட்டன. உச்ச நீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிவகீர்த்தி சிங், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று பிறப்பித்த தீர்ப்பில், ''ஆசிரி யர் தகுதித் தேர்வு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த 2 அரசு ஆணைகளும் செல்லும். சரியான உத்தரவைத்தான் தமிழக அரசு பிறப்பித்துள்ளது. சமுதாயத்தில் பின்தங்கிய இட ஒதுக்கீட்டு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு 5 சதவீத மதிப்பெண் விலக்கு அளிப்பதில் எந்த தவறுமில்லை'' என அதில் குறிப்பிட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக தடைபட்டுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு மீண்டும் நடைபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Comments
Post a Comment