வங்கி கணக்கில் ரூ.2½ லட்சம் செலுத்தினால் வருமான வரி கணக்கு எண் அவசியம் மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு

வங்கி கணக்கில் ரூ.2½ லட்சம் செலுத்தினால் வருமான வரி கணக்கு எண் அவசியம் மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு | வங்கி சேமிப்பு கணக்கில் ஒருவர் ஒரு நாளில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் செலுத்தினால் (டெபாசிட்) வருமான வரி கணக்கு எண்ணை ('பான்' நெம்பர்) தெரிவிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். தற்போது 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால், ஏராளமானோர் தங்களிடம் உள்ள அந்த ரூபாய் நோட்டுகளை அவ்வப்போது தங்கள் வங்கி கணக்கில் செலுத்தி வருகிறார்கள். செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த ரூபாய் நோட்டுகளை வருகிற டிசம்பர் 30-ந்தேதி வரை வங்கி கணக்கில் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. எனவே அப்படி பணம் போடுபவர்கள், கடந்த 10-ந்தேதி முதல் டிசம்பர் 30-ந்தேதி வரை தங்கள் வங்கி கணக்கில் ரூ.2½ லட்சமோ அல்லது அதற்கு மேற்பட்ட தொகையையோ செலுத்தி இருந்தால் அவர்கள் தங்கள் வருமான வரி கணக்கு எண்ணை தெரிவிக்க வேண்டியது அவசியம் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment