தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளில் 19-ந்தேதி பொதுவிடுமுறை தமிழக அரசு அறிவிப்பு

தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளில் 19-ந்தேதி பொதுவிடுமுறை தமிழக அரசு அறிவிப்பு

இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் பொதுத்தேர்தலும், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தலும் நடக்க இருப்பதால், அந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வாக்குப்பதிவு நாளான 19-ந் தேதியன்று (சனிக்கிழமை) பொதுவிடுமுறை அளிப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கரூர், தஞ்சாவூர், மதுரை ஆகிய மாவட்டங்கள் மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் பணியாற்றும் ஊழியர்கள் யாருக்காவது அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளின் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கும்பட்சத்தில், அவர்களுக்கும் 19-ந் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க உத்தரவிடப்படுகிறது. அந்த 3 தொகுதிகளுக்கும் உட்பட்ட பகுதிகளில் இருக்கும் அனைத்து அரசு அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரும் அமைப்புகள், அனைத்து கல்வி நிறுவனங்கள் ஆகியவை 19-ந் தேதியன்று அடைக்கப்படவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments