SCROL

Saturday, November 12, 2016

சுங்கச் சாவடி கட்டண வசூல் மேலும் 3 நாட்கள் நிறுத்திவைப்பு

சுங்கச் சாவடி கட்டண வசூல் மேலும் 3 நாட்கள் நிறுத்திவைப்பு | சுங்கச் சாவடிகளில் கட்ட ணம் வசூலிப்பது மேலும் 3 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. நோட்டுகள் செல்லாது பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி இரவு ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். மேலும் 11-ந்தேதி நள்ளிரவு (நேற்று) 12 மணி வரை பழைய நோட்டுகள், விமான நிலையங்கள், ரெயில், பஸ்நிலைய முன்பதிவு கவுண்ட்டர்கள், மருந்துகடைகள், ஆஸ்பத்திரிகள், பெட்ரோல் நிலையங்களில் செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் வாகன ஓட்டிகளுக்கும், சுங்கச் சாவடி ஊழியர்களுக்கும் இடையே பல இடங்களில் மோதலும், வாக்குவாதமும் ஏற்பட்டது. இதனால் பல்வேறு இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 3 நாட்கள் நீடிப்பு இதைத்தொடர்ந்து மத்திய போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி 11-ந்தேதி நள்ளிரவு வரை நாட்டின் அனைத்துச் சுங்கச் சாவடிகள் அனைத்திலும் கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைக்கப்படுவதாக கடந்த 9-ந்தேதி அறிவித்தார். என்றபோதிலும் பழைய ரூ.500, 1,000 நோட்டுகளை பெற்றுக் கொள்ளும் பிரச்சினையில் நிலைமை இன்னும் சீரடையவில்லை. மத்திய அரசு அறிவித்த புதிய ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்திற்கு விடப்பட்டும் கூட அது யானைப் பசிக்கு சோளப்பொரி போட்ட கதையாகத்தான் இருந்தது. இதனால் சுங்கச்சாவடிகளில் மீண்டும் பிரச்சினை ஏற்படலாம் என்று மத்திய அரசு கருதியது. இதையடுத்து, வருகிற 14-ந்தேதி நள்ளிரவு 12 மணி வரை மேலும் 3 நாட்களுக்கு நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைக்கப்படுவதாக நேற்று மாலை மத்திய மந்திரி நிதின் கட்காரி அறிவித்தார். பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்ப்பதற்காகவும், போக்குவரத்து சுமுகமாக நடைபெறுவதற்கு ஏதுவாகவும் இந்த நீடிப்பை செய்வதாக அவர் டுவிட்டரில் தெரிவித்தார். பயன்படுத்தலாம் அதேநேரம் சமையல் எரிவாயு, அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி, ரெயில்வே கேட்டரிங், பால் பூத்துகள், பஸ், ரெயில் போக்குவரத்து, விமான நிலையங்கள், மயானங்கள், அடக்கஸ்தலங்கள், மெட்ரோ ரெயில் டிக்கெட், பெட்ரோல் நிலையங்கள், மின்சாரம், குடிநீர், இந்திய தொல்லியல் துறையின் நுழைவு கட்டணம், கூட்டுறவு விற்பனை நிலையங்கள், கோர்ட்டு கட்டணங்கள், அபராத தொகை, வரிகள் போன்ற மத்திய, மாநில அரசுகளுக்கு செலுத்தவேண்டிய பொதுப் பயன்பாட்டுக்கு 'பில்' கட்டணம் செலுத்துபவர்கள் 11-ந்தேதி நள்ளிரவு 12 மணிவரை வரை பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை பயன்படுத்திக் கொள்வதற்கு மத்திய அரசு கடந்த 8-ந்தேதி அனுமதி அளித்து இருந்தது. இந்த அவகாசம் நேற்றிரவு முடிந்த நிலையில் தற்போது மேலும் 72 மணி நேரம் (3 நாட்கள்) நீடிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தகுந்த ஆதாரங்களைக் காண்பித்து பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு உயர் அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment