விமான நிறுவனங்களில் 495 வேலைவாய்ப்புகள்

விமான நிறுவனங்களில் 495 வேலைவாய்ப்புகள் | விமான நிறுவனங்களில் விமானி மற்றும் இதர அலுவலக பணியிடங்களுக்கு 495 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய பொதுத்துறை விமான நிறுவனம் ஏர் இந்தியா எனப்படுகிறது. இந்த நிறுவனத்தில் தற்போது விமானி மற்றும் மருத்துவ அதிகாரி பணியிடங்கள் உள்ளிட்ட வேலைகளுக்கு 150 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதேபோல இதன் துணை நிறுவனமான ஏர்இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் லிமிடெட் (AIATSL) நிறுவனத்தில் செக்யூரிட்டி ஏஜெண்ட் பணிகளுக்கு நேரடி நேர்காணல் அடிப்படையில் 345 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... விமானி, மருத்துவ அதிகாரி பணிகள் ஏர் இந்தியா நிறுவனத்தில் விமானி, மருத்துவ அதிகாரி போன்ற பணிகளுக்கு 150 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் இட ஒதுக்கீடு வாரியாக பொது-75, .பி.சி.-41, எஸ்.சி.-23, எஸ்.டி.-11 பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. விமானி, துணை விமான பணிகளுக்கு குறிப்பிட்ட ரக விமானங்கள் இயக்கும் பைலட் உரிமம் பெற்றிருப்பது அவசியம். மருத்துவம் படித்தவர்களுக்கும் ஒரு சில பணிகள் உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் ரூ.3000-க்கு டி.டி. எடுத்து, விண்ணப்பிக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் புதுடெல்லியில் உள்ள ஏர்இந்தியா விமான இயக்குனர் அலுவலகத்தில் பெயரை பதிவு செய்து வைத்துவிட்டு நேர்காணலில் பங்கேற்க வேண்டும். 14-12-2016-ந் தேதி வரை பெயரை பதிவு செய்யலாம். அடுத்தநாள் நேர்காணல் நடைபெறும். சீனியர் விமானி பணிக்கு 23-12-2016-ந் தேதி வரை விண்ணப்பம் கொடுக்கலாம். இது பற்றிய விவரங்களை www.airindia.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். நேரடி நேர்காணல் ...டி.எஸ்.எல். நிறுவனத்தின் டெல்லி மற்றும் 23 விமான நிலையங்களை உள்ளடக்கிய வடக்கு மண்டலத்தில் செக்யூரிட்டி ஏஜெண்ட் பணிகளுக்கு 345 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள். இட ஒதுக்கீடு வாரியாக பொதுப் பிரிவுக்கு 165 இடங்களும், .பி.சி. பிரிவினருக்கு 102 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 56 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 22 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-12-2016-ந் தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். பணி தொடர்பான சான்றிதழ் படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும். உடல்திறன் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி, குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி எடுத்துச் செல்ல வேண்டும். இதற்கான நேர்காணல் 6-12-2016 முதல் 9-12-2016-ந் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேர்வு முறைகள் நடைபெறும் என்பதால் தயாராக செல்ல வேண்டும். புதுடெல்லியில் உள்ள ஏர்இந்தியா விமான நிறுவனத்தின் கம்யூனிட்டி சென்டரில் நேர் காணல் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment