SCROL

Monday, November 14, 2016

புதிய 500 ரூபாய் நோட்டுகள் நாளை முதல் வங்கிகளில் கிடைக்கும் ரிசர்வ் வங்கி அதிகாரி தகவல்

புதிய 500 ரூபாய் நோட்டுகள் நாளை முதல் வங்கிகளில் கிடைக்கும் ரிசர்வ் வங்கி அதிகாரி தகவல்


புதிய 500 ரூபாய் நோட்டுகள் நாளை முதல் வங்கிகளில் கிடைக்கும் ரிசர்வ் வங்கி அதிகாரி தகவல் | வங்கிகளில் நாளை முதல் புதிய 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புதிய 500 ரூபாய் நோட்டுகள் மத்திய அரசு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதைத் தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டு வருகிறது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் தங்களது தேவைகளுக்காக எளிதில் மாற்ற முடியவில்லை. இதனால் நாடு முழுவதும் சில்லரை தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கு புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வராததே முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:- நாளை கிடைக்கும் புதிதாக அச்சடிக்கப்பட்ட 50 லட்சம் எண்ணிக்கையிலான 500 ரூபாய் நோட்டுகள் சனிக்கிழமை தான் ரிசர்வ் வங்கி வந்தடைந்தது. இந்த புதிய 500 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் பொதுமக்கள் வங்கிகளில் புதிய 500 ரூபாய் நோட்டுகளை பெறலாம். 40 கோடி நோட்டுகள் புதிதாக அச்சடிக்கப்படும் மேலும் 50 லட்சம் எண்ணிக்கையில் 500 ரூபாய் நோட்டுகள் புதன்கிழமை ரிசர்வ் வங்கி வந்தடையும். தற்போது மராட்டிய மாநிலம் நாசிக் நகரில் வருகிற மார்ச் மாதத்திற்குள் 40 கோடி எண்ணிக்கையில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படும். கடந்த 2 வாரமாக புதிய நோட்டுகள் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment