SCROL

Monday, November 14, 2016

ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணிக்கு 610 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

ரிசர்வ் வங்கியில் 610 பணியிடங்கள் | ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணிக்கு 610 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.| இது பற்றிய விவரம் வருமாறு:- வங்கிகளின் வங்கி என அழைக்கப்படும் ரிசர்வ் வங்கி சுருக்கமாக ஆர்.பி.. என அழைக்கப்படுகிறது. தற்போது ரிசர்வ் வங்கி கிளைகளில் உதவியாளர் (அசிஸ்டன்ட்) பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 610 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் சென்னை ஆர்.பி.. கிளைக்கு 25 பேர் தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை கீழே பார்க்கலாம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 7-11-2016 தேதியில் 20 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 8-11-1988 மற்றும் 7-11-1996 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந் திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், .பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி:

ஏதேனும் ஒரு கல்விப் பிரிவில் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இவர்கள் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம். இதில் குறிப்பிட்ட பிரிவினருக்கு விலக்கு அனுமதிக்கப்படுகிறது.

தேர்வு செய்யும் முறை:

முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

கட்டணம் :

பொது மற்றும் .பி.சி. விண்ணப்பதாரர்கள் ரூ.450 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் ரூ.50 கட்டணம் செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 28-11-2016-ந் தேதியாகும். இறுதியாக பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.rbi.org.in என்ற இணையதள முக வரியைப் பார்க்கலாம்.

No comments:

Post a Comment