62 நவோதயா பள்ளிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்

62 நவோதயா பள்ளிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் | நாடு முழுவதும் 62 ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி களை தொடங்க மத்திய அமைச்ச ரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய பொருளா தார விவகாரங்களுக்கான அமைச்சரவை (சிசிஇஏ) கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் 62 ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை தொடங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. - பிடிஐ இதன்படி சத்தீஸ்கர் மாநிலத் தில் 11, குஜராத்தில் 8, டெல்லியில் 7, ஜம்மு காஷ்மீரில் 5, உத்தரப் பிரதேசத்தில் 5 பள்ளிகள் உட்பட பிற மாநிலங்களிலும் நவோதயா பள்ளிகள் தொடங்கப்படும். இதன் மூலம் 35 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். மேலும் 2,914 பேருக்கு நிரந்த வேலை வாய்ப்பு கிடைக்கும். ரூ.2,871 கோடி செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இப்போதைய நிலவரப்படி 598 நவோதயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment