வேலைவாய்ப்புக்காக காத்திருப்போர் 82.36 லட்சம் தமிழக அரசு தகவல்

வேலைவாய்ப்புக்காக காத்திருப்போர் 82.36 லட்சம் தமிழக அரசு தகவல் | தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வி மற்றும் கல்லூரிக் கல்வியை முடிக்கும் மாணவ, மாணவிகள், அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயரை பதிவு செய்து வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் வரை பெயர் பதிவு செய்திருப்போரின் எண்ணிக்கை விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் 82 லட்சத்து 36 ஆயிரத்து 843 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 42 லட்சத்து 33 ஆயிரத்து 343 பேர் பெண்கள். அந்த பெண்களில் 9 லட்சத்து 6 ஆயிரத்து 962 பேர் தொழில் கல்வியாளர்கள், 10 ஆயிரத்து 970 பேர் விதவைகள், 43 ஆயிரத்து 64 பேர் கலப்புத் திருமணம் செய்தவர்கள், ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 509 பேர் மாற்றுத்திறனாளிகள்.

No comments:

Post a Comment