நாட்டின் வளர்ச்சி 9 சதவீதமாக தொடர்ந்தால் 2030-ல் தனிநபர் வருமானம் 8000 டாலராக உயரும் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் பேச்சு

நாட்டின் வளர்ச்சி 9 சதவீதமாக தொடர்ந்தால் 2030-ல் தனிநபர் வருமானம் 8000 டாலராக உயரும் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் பேச்சு | அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி 8 முதல் 9 சதவீதம் இருந்தால் மட்டுமே, தற்போதுள்ள தனிநபர் வருமானம் 1,600 டாலரில் இருந்து 2030-ம் ஆண்டு 8,000 டாலராக உயரும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தெரிவித்தார். தமிழ்நாடு பொருளாதார நிபுணர்கள் சங்கத்தின் 37-வது ஆண்டு மாநில கருத்தரங்கு ஈரோடு கலைக்கல்லூரியில் நேற்று நடந்தது. கருத்தரங்கில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன், 'இந்தியாவில் சீர்திருத்த நடவடிக்கைகள்' என்ற தலைப்பில் பேசியதாவது: நமது நாட்டில் தற்போதுள்ள உயர்கல்வியில் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறைகளில் மிகப் பெரிய மாற்றம் தேவை. உலக தரத்திற்கேற்ப, நவீன மயமாக்கப் பட்ட பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இப்போதுள்ள தேர்வு முறையைப் பொறுத்தவரை கேள்வி களுக்கு விடையளிப்பதன் மூலம் மாணவர்களின் திறமை அளவிடப் படுகிறது. அதேபோல், ஆசிரியர் களின் தரத்தை மேம்படுத்துவது மிகவும் அவசியமானது. கடந்த 1991-ம் ஆண்டில் புதிய பொருளாதார சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்ட பின்புதான், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி சராசரியாக 7 சதவீதமாக தொடர்வதற்கு புதிய பொருளாதாரக் கொள்கையே காரணம். மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு திட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும். நாட்டின் பொருளாதார திறனை இது உயர்த்தும். புதிய பொருளாதார கொள்கை அமல்படுத்தப்பட்ட பின், பல்வேறு தொழில் திட்டங் களுக்காக விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. விவசாயி கள் தங்கள் நிலங்களின் மதிப்பு குறித்து நன்கு அறிந்து வைத்துள்ள தால், குறைந்த விலைக்கு நிலங் களை வழங்க அவர்கள் விரும்ப வில்லை. திட்டங்களுக்காக இனி மேல் கையகப்படுத்தும் நிலங் களுக்கு அரசு விலையை நிர்ண யம் செய்யக்கூடாது. இதன் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறையும். சர்க்கரை உற்பத்தியைப் பொறுத்தவரை 1999-ம் ஆண்டுக்கு முந்தைய நிலையே நிலவி வருகிறது. சர்க்கரை ஆலைகளில் இருந்து மொலாசிஸ் விற்பனை செய்வதற்கான விலையை அரசே நிர்ணயம் செய்கிறது. அரசு நிர்ணயம் செய்யாமல், சந்தை விலைக்கு விற்க வழிவகை செய்ய வேண்டும். அதே போல் இயற்கை வளங்களுக்கான விலை நிர்ணயம் செய்வதிலும் போட்டி இருக்க வேண்டும். விவசாயத்துறையில் தொழில் நுட்பம் மற்றும் சந்தைப்படுத்து தலில் மாற்றங்கள் தேவையாக உள்ளது. குறிப்பாக, காய்கறிகளை எங்கு வேண்டுமானாலும் விற் பனைக்கு அனுப்பி வைக்கும் வசதி இன்னும் முழுமைப்படுத்தப் படவில்லை. அடுத்து வரும் 10 ஆண்டு காலம் என்பது நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான காலம் ஆகும். இந்த 10 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி 8 முதல் 9 சதவீதம் இருந்தால் மட்டுமே, தற்போதுள்ள தனிநபர் வருமானம் 1,600 டாலரில் இருந்து 2030-ம் ஆண்டு 8,000 டாலராக உயரும். இதன்மூலமே, குறைந்த வருவாய் பெறுவோர் அதிகம் கொண்ட பிரிவில் இருந்து மத்திய தர வருவாய் அதிகம் பெறும் நாடாக மாற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Comments