டி.இ.ஓ.,தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

டி...,தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது | பள்ளி கல்வித்துறையில், டி..., பதவியில், 11 காலியிடங்களுக்கு, 2015, ஆகஸ்டில், முதன்மை எழுத்துத்தேர்வு நடந்தது. இதில், 2,432 பேர் பங்கேற்றனர். இவர்களில், 35 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு பெற்றதாக, டி.என்.பி.எஸ்.சி., நேற்று அறிவித்தது. இவர்களுக்கு, நவ., 21ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது.இதேபோல், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவியில், 24 காலியிடங்களுக்கான, 'குரூப் - 3 ' எழுத்துத் தேர்வு, 2013 ஆகஸ்டில் நடந்தது. இதில், 46 ஆயிரத்து, 797 பேர் பங்கேற்றனர் இவர்களில், 843 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, நவ., 25 முதல் டிச., 2 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டோரின் விபரம், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.Comments