சைனிக் பள்ளியில் சேர்க்கை அறிவிப்பு

சைனிக் பள்ளியில் சேர்க்கை அறிவிப்பு | மத்திய அரசின் சைனிக் பள்ளியில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை மாண வர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு நடத்தும் சைனிக் பள்ளி தமிழகத்தில் கோவை அடுத்த அமராவதி நகரில் உள்ளது. இப்பள்ளியில் 2017-18-ம் கல்வி யாண்டுக்கான 6 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான நுழைவுத் தேர்வு வரும் 2017-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி நடை பெற உள்ளது. மாணவர்கள் மட்டுமே இப்பள்ளியில் சேர முடி யும். அவர்களுடைய வயது வரம்பு 2017 ஜூலை 1-ம் தேதியன்று 10 முதல் 11 வயதுக்குள் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவம் வரும் 18-ம் தேதி வரை விற்பனை செய்யப்படும். விண்ணப்பப் படிவத்தின் விலை பொதுப் பிரிவி னருக்கு ரூ.650. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500. விண்ணப்பப் படிவங்களை www.sainikschoolamaravathinagar.edu.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பெற்றோர்களின் வருமானத்தைப் பொறுத்து தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு வருடத்துக்கு ரூ.50 ஆயிரம் ஸ்காலர்ஷிப் வழங்கப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை 04252-256246/96 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம். மத்திய பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments