மாற்றுத்திறனாளிகளுக்கு கடற்படையில் வேலை

மாற்றுத்திறனாளிகளுக்கு கடற்படையில் வேலை | இந்திய கடற்படையின் கீழ் செயல்படும் மும்பை கடற்படை தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. டிரேட்ஸ்மேன் மேட் (குரூப்-சி) பணிக்கு மொத்தம் 39 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் அறிவிப்பில் இருந்து 21 நாட்களுக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு நவம்பர் 5-11 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் வெளியாகி உள்ளது. ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பித்தவர்கள், அதை கணினிப்பிரதி எடுத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.indiannavy.nic.in என்ற இணைய தள முகவரியைப் பார்க்கவும்.

 

No comments:

Post a Comment