விடுப்பு எடுக்காத மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சான்றிதழ் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் அறிமுகமாகிறது

விடுப்பு எடுக்காத மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சான்றிதழ் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் அறிமுகமாகிறது | விடுப்பு எடுக்காத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் திட்டம் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் இந்த ஆண்டு அறிமுகமாகிறது. ஆண்டு முழுவதும் ஒருநாள்கூட விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதற்காக ரூ.5 லட்சம் ஒதுக்கப்பட்டது. இந்த திட்டத்தை முதல்கட்டமாக தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. எனவே, அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 2016-17-ம் கல்வி ஆண்டில் விடுப்பே எடுக்காமல் பள்ளிக்கும் வரும் மாணவர்கள், ஆசிரியர்களின் விவரங்களை சேகரித்து அனுப்புமாறு அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கும் மாநில தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 


Comments