மாணவனை ஆசிரியர் தாக்கிய சம்பவம்:பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்-மனித உரிமை ஆணையம் உத்தரவு

மாணவனை ஆசிரியர் தாக்கிய சம்பவம்:பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்-மனித உரிமை ஆணையம் உத்தரவு

கடலூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரதாப். இவர் முழுமையான சீருடையில் வரவில்லை என்று கூறி, அவனை உடற்பயிற்சி ஆசிரியர் கமால்பாஷா தலையில் அடித்துள்ளார். இதில், அந்த மாணவனின் கேட்டும் திறன் பறிபோனது.இதுகுறித்து பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இந்த செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதிபதி டி.மீனாகுமாரி, தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தார். பின்னர், இந்த சம்பவம் குறித்து 4 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி, பள்ளிக்கல்வித்துறை செயலாளர், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Comments