கடற்படையில் என்ஜினீயரிங் பட்டதாரிகள் சேர்ப்பு

கடற்படையில் என்ஜினீயரிங் பட்டதாரிகள் சேர்ப்பு | கடற்படையில் ஆய்வுப் பணிகளுக்கு என்ஜினீயரிங் பட்டதாரிகளை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்திய ராணுவத்தின் முப்படை பிரிவுகளில் ஒன்றான கடற்படை பல்வேறு சிறப்பு நுழைவுகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்களை படைப்பிரிவில் சேர்த்து வருகிறது. தற்போது கோர்ஸ் காமென்சிங் ஜூன்-2017 பயிற்சியின் கீழ் 'நேவல் அர்மாமென்ட் இன்ஸ்பெக்சன் கேடர் (என்...சி.)' பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது பெர்மனன்ட் கமிஷனின் கீழ் வரும் நிரந்தர பணிவாய்ப்பாகும். திருமணமாகாத இந்திய குடியுரிமை பெற்ற ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டும் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 19½ வயது முதல் 25 வயது உடையவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-7-1992 மற்றும் 1-1-1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். கல்வித் தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், புரொடக்சன், இன்ஸ்ட்ருமென்டேசன், .டி., கெமிக்கல், மெட்டலர்ஜி போன்ற பிரிவுகளில் பி.., பி.டெக் படித்தவர்கள் இந்த பயிற்சியில் சேரலாம். இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். இவர்கள் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம். உடல் தகுதி: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். பார்வைத்திறனும் குறிப்பிட்ட அளவுக்குள் இருக்க வேண்டும். நிறக்குருடு, மாலைக்கண் பாதிப்பு இருக்கக்கூடாது. தேர்வு செய்யும் முறை: சர்வீசஸ் செலக்சன் போர்டு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு முறைக்கு உட்படுத்தப்படுவார்கள். ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 ஆகிய இரு நிலைகளில் தேர்வு நடைபெறும். நுண்ணறிவுத்திறன், படங்களை புரிந்து கொள்ளுதல், கலந்துரையாடல், உளவியல் திறன், குழுத் தேர்வு, நேர்காணல், உடற்திறன், மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட தேர்வு முறைகளுக்கு உட்படுத்தி தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் உதவி லெப்டினன்ட் தரத்திலான அதிகாரியாக பணி நியமனம் பெறலாம். கமாண்டர் பதவி வரை பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெற முடியும். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்கள் 9-12-2016 வரை இணையதளத்தில் செயல்பாட்டில் இருக்கும். முன்னதாக புகைப்படம் மற்றும் கையொப்பத்தை குறிப்பிட்ட அளவுக்குள் ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பித்த பிறகு பூர்த்தியான விண்ணப்பத்தை 2 கணினிப் பிரதி எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு நகலுடன் தேவையான சான்றுகள் சுயசான்றொப்பம் செய்து இணைத்து Post Box No.02, Sarojini Nagar PO, New Delhi 110023 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அஞ்சல் முகப்பில் விண்ணப்பிக்கும் பயிற்சியின் பெயர், படிப்பு, மதிப்பெண் சதவீதம், என்.சி.சி. சான்றிதழ் போன்ற விவரங்களை குறிப்பிட வேண்டும். நகல் விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் 19-12-2016-ந் தேதி. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை பார்க்கவும் www.nausenabharti.nic.in என்ற இணையதளத்தை சொடுக்கவும்.

No comments:

Post a Comment