மாவட்ட கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் ‘மாணவர்களுக்கு சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’ பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு

மாவட்ட கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் 'மாணவர்களுக்கு சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு | பள்ளி மாணவர்களுக்கு சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குனர் .கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு பள்ளி கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சுத்தம் மற்றும் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வை பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்த அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாணவர்களுக்கு சுத்தம் சுகாதாரம் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தினசரி காலை வழிபாடு கூட்டத்தில் மாணவர்களை சுத்தம் மற்றும் சுகாதாரம் சார்ந்த கூற்றுகள் குறித்து பேசவைத்தல் வேண்டும். மாணவர்களுக்குச் சுத்தம் சுகாதாரம் சார்ந்து பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, தனிநடிப்பு போட்டி முதலியவற்றை நடத்தி தூய்மை பற்றி அறியச்செய்தல் வேண்டும். காலணி அணிய வேண்டும் மேலும் மலம் மற்றும் சிறுநீர் கழிக்க மாணவர்களை திறந்த வெளியினை உபயோகிக்கக் கூடாது என்றும் கழிப்பறை உபயோகிக்க வேண்டும் என அறிவுறுத்த வேண்டும். கழிப்பறைக்கு செல்லும் போது காலணிகளை அணிய வேண்டும் என அறிவுறுத்த வேண்டும். மேலும் கை கழுவுதலின் அவசியத்தினை மாணவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். மேலும், பல் துலக்குதல், குளித்தல், நகம் வெட்டுதல், தூய்மையான உடை அணிதல், சாப்பிடுவதற்கு முன்பு சோப்பினால் நன்கு கை கழுவுதல், சுகாதாரத்துடன் உணவு உண்ணுதல் போன்ற தன் சுத்தம் சார்ந்தும் குப்பைத் தொட்டிகளை பயன்படுத்துதல் மற்றும் சுற்றுப்புறத் தூய்மை பேணுதல் சார்ந்தும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி அவர்களிடம் நற்பழக்கத்தினை ஏற்படுத்த வேண்டும். தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை... பள்ளிகளில் குடிநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்து சுகாதாரத்துடன் பராமரித்தல் வேண்டும். பள்ளியில் சத்துணவு தயார் செய்யும் சமையல் அறை தூய்மையாகவும் சுகாதாரத்துடனும் இருத்தல் வேண்டும். தலைமை ஆசிரியர் அறை, வகுப்பறைகள், நூலகம், ஆய்வகம் ஆகியவற்றை ஒட்டடை அடித்து தூய்மைப்படுத்த தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தையும் விளையாட்டு மைதானத்தையும் தூய்மை செய்தல் வேண்டும். பள்ளி வளாகத்திற்குள் முட்புதர்கள் இருப்பின் அவற்றை அகற்றுதல் வேண்டும். பள்ளி வளாகத்திலுள்ள கதவுகள், சன்னல்கள், மின்விசிறிகள், நாற்காலிகள், மாணவர் இருக்கைகள், அலமாரிகள், கணினிகள், தொலைக் காட்சிபெட்டி, மடிக்கணினி போன்றவற்றில் படிகின்ற தூசிகளை துடைத்து தூய்மை பேண தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சுற்றறிக்கை மேற்கண்ட விவரங்களை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்த அனைத்து மாவட்டத் முதன்மைக் கல்வி அதிகாரிகளும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment