அண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை தேர்வுசெய்ய தேர்வுக்குழு நியமனம்

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை தேர்வுசெய்ய தேர்வுக்குழு நியமனம் | அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் எம்.ராஜாராமின் பதவிக்காலம் கடந்த மே மாதம் 26-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, துணைவேந்தர் பதவி கடந்த 5 மாதங்களுக்கு மேலாக காலியாக இருந்து வருகிறது. இந்த நிலையில், புதிய துணைவேந்தரை தேர்வுசெய்ய தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலர் .கார்த்திக் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வுசெய்ய ஒரு தேர்வுக்குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இதில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.பாஸ்கரன், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஹேமந்த்குமார் சின்ஹா, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் தலைவர் மற்றும் தாளாளர் கருமுத்து டி.கண்ணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆளுநரின் நியமனதாரரான எம்.பாஸ்கரன் தேர்வுக்குழுவின் அமைப்பாளராக செயல்படுவார். இந்த தேர்வுக்குழு, துணைவேந்தர் பதவிக்கு 3 பேரை வேந்தரான ஆளுநருக்கு பரிந்துரை செய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தேர்வுக்குழு பரிந்துரை செய்யும் 3 நபர்களில் இருந்து ஒருவரை துணைவேந்தராக தேர்வுசெய்து வேந்தரான ஆளுநர் நியமிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment