கல்விக் கடன் குறித்து ரிலையன்ஸ் விளக்கம்

கல்விக் கடன் குறித்து ரிலையன்ஸ் விளக்கம் | கல்விக் கடன் தொடர்பாக லெனினின் தந்தைக்கு நெருக்கடி கொடுக்கவில்லை என்று ரிலையன்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பொறியியல் படிப்புக்காக மதுரை சிட்டி எஸ்பிஐ வங்கியில் கட்டிடத் தொழிலாளர் கதிரேசன் ரூ.1.90 லட்சம் கடன் பெற்றிருந்தார். எஸ்பிஐ வங்கிக்காக கல்விக் கடனை வசூலிக்கும் பொறுப்பு 'ரிலையன்ஸ் ரெக்கவரி' அமைப் பிடம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் கதிரேசனின் மகன் லெனின் தூக்கிட்டு தற் கொலை செய்துகொண்டார். இந்நிலையில், கல்விக் கடனை செலுத்தும்படி கதிரேசனுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் நெருக்கடி கொடுத்து வருவதாக கடந்த 4-ம் தேதி 'தி இந்து தமிழ்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதேபோன்று மாற்றுத்திறனாளி ராகேஷ் என்பவரின் தந்தை பாலமுருகனுக்கும் நெருக்கடி கொடுப்பதாக செய்தி வெளியிடப் பட்டிருந்தது. இந்த இரண்டு சம்பவங்களை யும் ரிலையன்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை தகவல் தொடர்பு அதி காரி ஷரத் கோயல், ''கதிரே சனை நாங்கள் தொடர்பு கொள்ள வில்லை. அவருக்கு எந்த நெருக் கடியும் தரவில்லை. அவர்களது கடன் தொகை தள்ளுபடி செய்யப் பட்டு, அந்தத் தகவல் எஸ்பிஐ சென்னை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது. கடன் நிலுவை இல்லை என்பதற் கான கடிதமும் கடந்த ஜூலை மாதமே கதிரேசனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளி ராகேஷின் தந்தை பாலமுருகன் விவகாரத்தில், அவர்களது கடன் கணக்கை எஸ்பிஐ நிறுவனம் எங்களுக்கு தவறுதலாக அனுப்பிவிட்டது. அந்த தகவல் தெரிந்ததும் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி அதை எஸ்பிஐ-க்கு திருப்பி அனுப்பிவிட்டோம். இந்நிலையில், பாலமுருகனிடம் நாங்கள் தொடர்புகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Comments