சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பிஎச்டி படிப்பு வரை (தொழிற்கல்வி படிப்புகள் உள்பட) படிக்கும் முஸ்லிம், கிறிஸ்தவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு மத்திய அரசு தகுதி மற்றும் வருமானம் அடிப்படையில் கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. நடப்பு கல்வி ஆண்டில் (2016-17) கல்வி உதவித்தொகை பெறு வதற்கு ஆன்லைனில் (www.scholarships.gov.in) விண்ணப் பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியுடைய சிறுபான்மையின மாணவ-மாணவிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments