மாணவர்களுக்கான அம்பேத்கர் வினாடி வினா போட்டி - அறிவிப்பு.

மாணவர்களுக்கான அம்பேத்கர் வினாடி வினா போட்டி - அறிவிப்பு.

இந்திய அரசியலமைப்புச் சட்டச் சிற்பி அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 125ஆவது பிறந்தநாளை முன்னிட்டுத் தமிழ்நாடு முழுவதும் இணையம் வழி மற்றும் நேரடியாக அம்பேத்கர் வினாடி வினா போட்டியை நடத்திட உள்ளோம். அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை இளந்தலைமுறையினர் அறிந்து கொள்வதற்காகவும் மாணவர்களின் அறிவுக்கூர்மையை மேம்படுத்துவதற்காகவும் இந்த வினாடிவினாபோட்டி நடத்தப்படவுள்ளது.வெற்றி பெறுகிற மாணவர்களுக்குச் சிறப்புப் பரிசுகளும் பங்குபெறுகிற அனைத்து மாணவர்களுக்கும் நற்சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. மேற்படி போட்டிகள் யாவும் அரையாண்டு விடுமுறை மற்றும் ஜனவரி 2017 மாதம் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களிலேயே நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளது.வினாடி வினா போட்டி குறித்து மாணவர்களுக்குத் தகவல் அளிக்கும்படி தலைமையாசிரியர்களுக்குச் சுற்றறிக்கை அளிக்கும்படி முதன்மைக் கல்வி  அலுவலர்களுக்குத் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரும், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர்களுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரும் ஆணையிட்டுள்ளார்கள். எனவே மேற்படி வினாடிவினா குறித்த தகவல்களைத் தங்கள் இணையத்தில் வெளியிட வேண்டும் என்றும் இந்த வினாடிவினா வெற்றி பெற தாங்கள் முழு ஆதரவையும் அன்பையும் வழங்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். சி.சரவணன்,   செயலாளர், அம்பேத்கர் கல்வி விளையாட்டு அறக்கட்டளை அம்பேத்கர் வினாடி வினா போட்டி

>>ரூ.10 லட்சம் மதிப்புள்ள சிறப்புப் பரிசுகள்

>>முதல் பத்து இடம் பிடிக்கும் வெற்றியாளர்களுக்கு வட்டம், மாவட்டம், மாநில அளவில் பரிசுகள்  வழங்கப்படும்.

>>அரையாண்டு விடுமுறை மற்றும் ஜனவரி 2017 மாத விடுமுறை நாட்களில் போட்டிகள் நடத்தப்படும்செலவுத்தொகையை அறக்கட்டளை ஏற்றுக் கொள்ளும்.

>>வினாடிவினாவிற்கு உரிய விடைகள் அடங்கிய அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் தேவைப்படுவோர் அறக்கட்டளையைத் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

>>பங்குபெற விரும்பும் மாணவர்களின் பெயர்களைப் பதிவு செய்ய கடைசி நாள் 6.12.2016

>>தொடர்பு  எண்கள்:   9487876005, 9976252800

>>மின்னஞ்சல் முகவரிambedkarquiz@gmail.com, sathiyapoonkuzhali@gmail.com

>>அஞ்சல் முகவரி:   3, காவிரிநகர், செருவங்கி, குடியாத்தம், வேலூர் மாவட்டம் 632602

>>இணையதளம்  www.ambedkarquiz.com or www.ambedkartrust.com

No comments:

Post a Comment