அணுசக்தி நிறுவனத்தில் வேலை

அணுசக்தி நிறுவனத்தில் வேலை | அணுசக்தி நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு: இந்திய அணுசக்தி துறையின் கீழ் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் (BARC) செயல்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் ஸ்டைபென்டரி டிரெயினி, டெக்னீசியன், அப்பர் டிவிஷன் கிளார்க் மற்றும் டெக்னீசியன் உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 168 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்க்கலாம்... வயது வரம்பு: 13-12-2016-ந் தேதியில் 25 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர் களுக்கு பணிகள் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதை இணையதளத்தில் பார்க்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், .பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப் படும். கல்வித்தகுதி: அறிவியல் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து பள்ளிப்படிப்பை நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் பாய்லர் அட்டன்ட் சான்றிதழ் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். அறிவியல், கலைப்படிப்புகளில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு, திறமைத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கட்டணம் : விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள், பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 13-12-2016-ந் தேதி ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாளாகும். எழுத்து தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பத்தின் நகல் கொண்டு செல்ல வேண்டும் என்பதால் பூர்த்தியான விண்ணப்பத்தையும், தேர்வுக்கான அனுமதி அட்டையையும் கணினிப்பிரதி எடுத்துச் செல்வது அவசியம். சில அசல் சான்றிதழ்களும் தேர்வு சமயத்தில் சரிபார்க்கப்படுகிறது. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.barcrecruit.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment