எலும்புகளைக் காக்கும் உணவுகள்

எலும்புகளைக் காக்கும் உணவுகள்நம் உடம்பின் அடிப்படைக் கட்டுமான அமைப்பாகத் திகழும் எலும்புகளைக் காக்க நாம் உண்ணும் உணவில் கவனம் செலுத்துவது அவசியம்.அதிக புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உடலில் அமிலத்தன்மையை அதிகரிக்கும். அதனால் எலும்புகள் வலுவிழக்கும். உணவில் சேரும் அதிகப்படியான உப்பும் எலும்பின் வலிமைக்கு எதிராக அமையும்.உடலில் உப்பு அதிகமாகும்போது அதிகப்படியான உப்பு சிறுநீருடன் வெளியேறும். அப்போது அதனுடன் கால்சியமும் தாதுவும் வெளியேறிவிடும். அதனால், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சாஸ், அப்பளம், ஊறுகாய், வறுவல் மற்றும் நொறுக்குதீனியை குறைத்துக்கொள்ள வேண்டும்.பாஸ்பாரிக் அமிலம் உள்ள குளிர்பானங்கள், கால்சியம் சத்துகளை அழிக்கும் தன்மை உள்ளவை. காபி, டீ போன்ற பானங்களை நாம் அதிகமாக குடிப்பதும் நம் உடம்பில் உள்ள கால்சியம் குறைவதற்கு காரணமாகும்.பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 400 மி.லி. பால் அருந்த வேண்டும். வயதானவர்களுக்கு பால் அதிகம் செரிமானம் ஆவதில்லை என்பதால் அவர்கள் பால் அளவை குறைத்துக்கொள்ளலாம்.அதோடு அவர்கள், கால்சியம் சத்துகள் நிறைந்த காய்கறிகள், கீரைகள் மற்றும் சிறு தானியங்களை உண்ணலாம். காய்கறிகளில் பீட்ரூட், வெண்டைக்காய், முருங்கைக்காய், சுண்டைக்காய், தாமரைத்தண்டு போன்றவற்றில் கால்சியம் தாராளமாக உள்ளது.அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை, கறிவேப்பிலை, தண்டுக்கீரை, குப்பைமேனிக் கீரை மற்றும் வெற்றிலையில் கால்சியச் சத்து அதிகம்.எள்ளில் கால்சியச் சத்து நிறைந்திருப்பதால் அதை வெல்ல உருண்டைகளாகத் தயாரித்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.கேழ்வரகிலும், பிரண்டை யிலும் கால்சியச் சத்து அதிகம். கேழ்வரகு அடை, பிரண்டைத் துவையல் என்று தயாரித்துச் சாப்பிடலாம்.

Comments