தேசிய இளைஞர் விழா : அரசு சார்பில் பங்கேற்கலாம்

தேசிய இளைஞர் விழா : அரசு சார்பில் பங்கேற்கலாம்

'தேசிய இளைஞர் விழாவில், தமிழகம் சார்பில் பங்கேற்க விரும்புவோர், நவ., 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.ஹரியானா மாநிலம், ரோதக் நகரில், 21வது தேசிய இளைஞர் விழா, ஜன., 12 முதல், 16 வரை நடைபெற உள்ளது. இவ்விழாவில் பங்கேற்க, நாட்டுப்புற நடனம், ஓரங்க நாடகம், சங்கீதம், பேச்சு போட்டி, பரத நாட்டியம், இசைக்கருவிகள் இசைத்தல் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும், 100 பேர், தமிழகம் சார்பில், அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.இதில், 'தகுதியுள்ள, 13 முதல், 25 வயதிற்குட்பட்ட, ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம்.இதற்கான விண்ணப்பம், www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, வரும், 15க்குள், ywtnadu@gmail.com என்ற, ' - மெயில்' முகவரிக்கு அனுப்ப வேண்டும்' என, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

Comments