வங்கியில் பணம் எடுக்க கட்டுப்பாடு தளர்வு ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கியில் பணம் எடுக்க கட்டுப்பாடு தளர்வு ரிசர்வ் வங்கி அறிவிப்பு | வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்கள் தற்போது வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் வரை எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த கட்டுப்பாடு காரணமாக வங்கியில் பணத்தை 'டெபாசிட்' செய்ய வாடிக்கையாளர்கள் தயங்கியதாக தெரியவந்தது. எனவே பல்வேறு அம்சங்களையும் கருத்தில் கொண்டு பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாட்டை தளர்த்தி ரிசர்வ் வங்கி நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, தற்போது வரையறுக்கப்பட்டுள்ள தொகையை (ரூ.24 ஆயிரம்) விட கூடுதல் தொகையை எடுத்துக்கொள்ள அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அப்படி எடுக்கும் போது அந்த தொகை 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளாக கிடைக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது.

 

 

No comments:

Post a Comment