மதிப்பெண் பட்டியலில் ஆதார் எண் இடம் பெறுமா?

மதிப்பெண் பட்டியலில் ஆதார் எண் இடம் பெறுமா? | பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களின் ஆதார் எண்ணை இந்த ஆண்டும் சேகரிப்பதால், மதிப்பெண் பட்டியலில், அந்த எண்இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கடந்த ஆண்டு முதல், பள்ளி மாணவர்களின் ஆதார் எண்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர்களின் ஆதார் எண்களை, தேர்வுத்துறை சேகரித்தது. மதிப்பெண் பட்டியலில், ஆதார் எண் இடம் பெறும் என, எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், அனைத்து மாணவர்களுக்கும் தனியாக, 14 இலக்க நிரந்தர பதிவெண் வழங்கப்பட்டது. இந்த பதிவெண், கல்லுாரிகளில் மாணவர்கள் சேரும் போதும் பதிவு செய்யப்பட்டுஉள்ளது. இந்த ஆண்டும், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களின் ஆதார் எண்கள் பெறப்படுகின்றன. வரும், 30ம் தேதிக்குள், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் ஆதார் எண்களை தேர்வுத்துறைக்கு அனுப்ப, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. எனவே, இந்த ஆண்டாவது, மதிப்பெண் பட்டியலில், ஆதார் எண் இணைக்கப்படுமா என, ஆசிரியர்களும், மாணவர்களும் எதிர்பார்த்துள்ளனர்.

Comments