துணை கலெக்டர், உதவி ஆணையாளர் பணிகள்

துணை கலெக்டர், உதவி ஆணையாளர் பணிகள் | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. தற்போது குரூப்-1 தரத்திலான அதிகாரி பணிகளுக்கான காலியிடங்களை அறிவித்துள்ளது. டெபுடி கலெக்டர் பணிக்கு 29 இடங்கள், டெபுடி சூப்பிரண்ட் ஆப் போலீஸ் பணிக்கு 34 இடங்களும், உதவி ஆணையாளர் (சி.டி.) பணிக்கு 8 பேரும், மாவட்ட பதிவாளர் பணிக்கு ஒரு இடமும், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி பணிக்கு 5 இடங்களும், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு அதிகாரி பணிக்கு 8 இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 85 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. பல்வேறு பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதி, உச்ச வயது வரம்பு மற்றும் விலக்கு விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 8-12-2016-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.tnpsc.gov.in/ www.tnpscexams.net / www.tnpscexams.in ஆகிய இணையதள முகவரிகளை பார்க்கலாம்.

Comments