முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ ஐசியுவில் இருந்து தனி அறைக்கு மாற்றம்

முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ ஐசியுவில் இருந்து தனி அறைக்கு மாற்றம் | முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ ஐசியுவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஜெயலலிதா ஐசியுவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டதால் அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பல்லோ மருத்துவமனை நிபுணர்கள் குழுவினர் அவருக்கு 58-ஆவது நாளாக தொடர்ந்து அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். முதல்வருக்கு லண்டனைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ரிச்சர்டு பீல், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த 3 நிபுணர்கள் கொண்ட குழுவினரும் சிகிச்சை அளித்தனர். அவர்களின் பரிந்துரையின்பேரில், அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை நிபுணர் குழுவினர் தொடர்ந்து 58-ஆவது நாளாக சிகிச்சை அளித்துவந்தனர். இந்தநிலையில் சிறந்த மருத்துவ நிபுணர்கள் நேரம் பார்க்காமல் உழைத்ததன் காரணமாக, முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்துள்ளார். அவரின் உடலில் ஏற்பட்ட முக்கிய பிரச்னைகள் அனைத்தும் சிகிச்சையின் மூலம் குணப்படுத்தப்பட்டுவிட்டது. இதையடுத்து இன்று மாலை வீடு திரும்பாவார் என்றும் அல்லது தனி அறைக்கு மாற்றப்படலாம் என்றும் தகவல் வெளியானது. அதேபோல் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ ஐசியுவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment