SCROL

Friday, November 18, 2016

வருங்கால வைப்பு நிதியின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் சென்னை மண்டல முதன்மை ஆணையர் தகவல்

வருங்கால வைப்பு நிதியின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் சென்னை மண்டல முதன்மை ஆணையர் தகவல் | சென்னை மண்டல முதன்மை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:- வருங்கால வைப்பு நிதிச் சட்டத்தை உள்ளடக்கிய தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் மற்றும் குடும்ப ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் ஓய்வூதியம் பெறும் ஒவ்வொரு பயனாளியும், தாங்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் தாங்கள் உயிரோடு இருப்பதற்கான வாழ்நாள் சான்றிதழ் மற்றும் மனைவியை இழந்தோர் தாங்கள் மறுமணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல், இந்த ஆண்டும் நவம்பர் மாதம் ஓய்வூதியதாரர்கள் மேற்படி சான்றிதழ்களை தாங்கள் ஓய்வூதியம் பெறும் வங்கிகளில் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வாழ்நாள் சான்றிதழை தற்போது இணையம் மூலமாக 'ஜீவன் பிரமான் போர்ட்டலிலும்' பதிவேற்றம் செய்யலாம். ஓய்வூதியதாரர்கள் தங்கள் வாழ்நாள் சான்றிதழை 'ஜீவன் பிரமான் பதா புரோகிராம்' பொது சேவை மையங்களை அணுகியும் சமர்ப்பிக்கலாம். தற்சமயம் இந்தியாவில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொது சேவை மையங்களை அணுகி தங்களது வாழ்நாள் சான்றிதழை பதிவேற்றம் செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment