அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெற புதிய விதி அறிவிப்பு

அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெற புதிய விதி அறிவிப்பு | தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்கள் புதிய பாஸ் போர்ட் பெறவோ, ஏற்கெனவே உள்ள பாஸ்போர்ட்டை புதுப்பிக் கவோ விரும்பினால், அரசிடம் இருந்து அடையாளச் சான்றிதழ், தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும். இதற்கான விண்ணப்பம் தொடர்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் ஏற்கெனவே திருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சமீபத்தில் ஒரு கடிதம் எழுதியது. அதில், புதிய பாஸ்போர்ட் அல்லது பாஸ்போர்ட் புதுப்பிக்க, சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் முன் தகவல் கடிதம் ஒன்றை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பத்தையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. எனவே, தமிழக அரசு ஊழியர் கள் ஏற்கெனவே உள்ள விண்ணப் பத்துடன், முன் தகவல் கடிதத் துக்கான விண்ணப்பத்தையும் சேர்த்து அளிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கேற்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் திருத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment