அதிவேக இணைய திட்டம் : முகவர்கள் நியமனம் தீவிரம்.

அதிவேக இணைய திட்டம் : முகவர்கள் நியமனம் தீவிரம்.

அதிவேக இணைய இணைப்பு தரும் திட்டத்தில், முகவர்களை சேர்ப்பதில், அரசு கேபிள், 'டிவி'நிறுவனம், தீவிரம் காட்டி வருகிறது. அரசு கேபிள் நிறுவனம், 'பிராட் பேண்ட்' என்ற, அதிகவேக இணைய இணைப்பு திட்டத்தை, மாவட்ட தலைநகரங்களில் செயல்படுத்தி வருகிறது; அதை, அனைத்து நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்த உள்ளது. அதற்காக, முகவர்களாக சேர விரும்புவோர், www.tactv.in, இணையதளத்தில் மனுக்களை பதிவிறக்கம் செய்து, 15க்குள் அனுப்பலாம் என, அரசு கேபிள் நிறுவனம் அறிவித்தது; இதுவரை, 6,000த்திற்கும் மேற்பட்டோர், பதிவிறக்கம் செய்துள்ளனர்.இந்நிலையில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தவர்களை மட்டுமின்றி, இணையதளத்தை பார்த்தவர்களையும் விடாமல், முகவர்களாக சேரும்படி, அரசு கேபிள் ஊழியர்கள் கூறி வருகின்றனர். சென்னையில் உள்ள, கேபிள், 'டிவி' அலுவலகத்தில், இதற்காகவே ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், 'பி.எஸ்.என்.எல்., கட்டணத்தை விட குறைவாக நிர்ணயித்துள்ளோம். இத்தொழிலில், நல்ல எதிர்காலம் உள்ளது; இளைஞர்கள் நம்பி வரலாம்' என்றனர்.

Comments