ராணுவத்தில் பணி நுழைவுத் தேர்வு முடிவு வெளியீடு

ராணுவத்தில் பணி நுழைவுத் தேர்வு முடிவு வெளியீடு

ராணுவத்தில் பணியில் சேரு வதற்காக நடத்தப்பட்ட பொது நுழைவுத் தேர்வின் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்திய ராணுவத்தில் கிளர்க் உள்ளிட்ட பல்வேறு பணி யிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக கடந்த அக்டோபர் மாதம் 23-ம் தேதி பொது நுழைவுத் தேர்வு கள் சென்னை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் நடத்தப்பட்டன. இத்தேர்வின் முடிவுகள் தற்போது வெளி யிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகள் www.joinindian army.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப் பட்டுள்ளது. மேலும், இதுகுறித்த தகவல் களை 044-25672110 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு அறியலாம். பாதுகாப்புத்துறை பத் திரிகை தகவல் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments