வீட்டில் வைத்திருக்கும் தங்கத்திற்கு வருகிறது கட்டுப்பாடு? மத்திய அரசு அடுத்த அதிரடி

வீட்டில் வைத்திருக்கும் தங்கத்திற்கு வருகிறது கட்டுப்பாடு? மத்திய அரசு அடுத்த அதிரடி |  ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, வீட்டில் வைத்திருக்கும் தங்கத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது.அதிரடி: கறுப்பு பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டுக்களை ஒழிக்கவும் கடந்த 8 ம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டது. மக்கள், வங்கியில் தங்களது பழைய ரூபாய் நோட்டுக்களை டிபாசிட் செய்து வருகின்றனர். இந்த அதிரடி நடவடிக்கைக்கு பிறகு, மத்திய அரசின் அடுத்த அதிரடி நடவடிக்கை தொடர்பாக வாட்ஸ் அப் உள்ளிட்ட பல சமூக வலைதளங்களில் பல விஷயங்கள் பரவி வருகின்றன. கட்டுப்பாடு? இந்நிலையில், மத்திய அரசு அடுத்த அதிரடியாக வீட்டில் வைத்திருக்கும் தங்கத்திற்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இதனை நிதி அமைச்சகம் உறுதிப்படுத்த மறுத்துவிட்டது. ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து தங்க இறக்குமதிக்கு அரசு கட்டுப்பாடு விதிக்கலாம் என்ற அச்சத்தில் நகை வியாபாரகள், அதிகளவில் தங்கம் இறக்குமதி செய்தனர். இதனால் தங்கத்தின் விலை, கடந்த வாரம் அதிகளவில் உயர்ந்தது. உலகளவில் தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. வருடந்தோறும், 1,000 டன் தங்கம் கறுப்பு பணம் கொடுத்து வாங்கப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு வாபசால், தங்கம் கடத்தப்படுவது குறைந்துள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

No comments:

Post a Comment