நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டத்தை அமல்படுத்தும் வரை தமிழகத்தில் ‘நீட்’ நுழைவுத் தேர்வு வேண்டாம் பிரதமருக்கு ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள்

நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டத்தை அமல்படுத்தும் வரை தமிழகத்தில் 'நீட்' நுழைவுத் தேர்வு வேண்டாம் பிரதமருக்கு ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள் | தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இள மாறன் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு 'நீட்' நுழைவுத் தேர்வு கொண்டுவருவதை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது. அதேநேரத்தில், நீட் தேர்வானது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வை எழுதுகிறார்கள். அவர்கள் ஏற்கெனவே படித்த பாடத்திட்டம் என்பதால் நீட் நுழைவுத்தேர்வு அவர்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும். ஆனால், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு அது மிகவும் கடினமாக இருக்கும். கடினமான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை நுழைவுத்தேர்வுக்கு திடீரென படிப்பது மிகவும் சிரமமான காரியம். பாடங்களைப் புரிந்து கொள்வதும் கடினமாக இருக்கும். மாநில பாடத்திட்டத் தில் படித்த மாணவர்களுக்கு உரிய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதுதான் நியாயமானது. எனவே, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை அமல்படுத்தும் வரை 'நீட்' நுழைவுத்தேர்வு தொடர்பான நடைமுறைகளை நிறுத்திவைக்குமாறு வேண்டு கோள் விடுக்கிறோம். அனைத்து மாணவர்களுக்கும் ஒரேமாதிரி யான பாடத்திட்டத்தைக் கொண்டுவந்து அதன்பிறகு அந்த பாடத்திட்டத்தின் அடிப் படையில் நீட் நுழைவுத் தேர்வை நடத்தினால் நியாய மான போட்டிக்கு வழிவகுக் கும். அதுதான் கல்வியில் சமத்துவத்தைக் கொண்டு வரும் அதற்கு வசதியாக நாடு முழுவ தும் ஒரேமாதிரியான பாடத் திட்டத்தை விரைவில் நடை முறைப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

No comments:

Post a Comment