12-ந் தேதிக்கு பதிலாக 13-ந் தேதி மிலாது நபி விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு

12-ந் தேதிக்கு பதிலாக 13-ந் தேதி மிலாது நபி விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு | தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- இந்த ஆண்டில் டிசம்பர் 12-ந் தேதியன்று மிலாது நபி விடுமுறை விடப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில், தமிழக அரசின் தலைமைக் காஜி அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், நவம்பர் 30-ந் தேதி பிறை தெரிந்ததாகவும், எனவே, மிலாது நபி விழா 13-ந் தேதியன்று கொண்டாடப்படும் என்றும் கூறியிருக்கிறார். மேலும், மிலாது நபி விழாவுக்கு 12-ந் தேதிக்குப் பதிலாக, 13-ந் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் அவர் அதில் கேட்டுக் கொண்டுள்ளார். இதை அரசு கவனமுடன் பரிசீலித்தது. அதன்படி, மிலாது நபி விடுமுறையை டிசம்பர் 12-ந் தேதிக்குப் பதிலாக, டிசம்பர் 13-ந் தேதியன்று (செவ்வாய்க்கிழமை) அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவிப்பாணை வெளியிடப்படுகிறது. அதன்படி, 13-ந் தேதியன்று மிலாதுநபி விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment