வங்க கடல் பகுதியில் உருவான வார்தா புயல் தீவிரம் அடைகிறது நெல்லூர்-காக்கிநாடா இடையே 12-ந் தேதி கரையை கடக்கும்

வங்க கடல் பகுதியில் உருவான வார்தா புயல் தீவிரம் அடைகிறது நெல்லூர்-காக்கிநாடா இடையே 12-ந் தேதி கரையை கடக்கும் | வார்தா புயல் 12-ந் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் காக்கிநாடாவுக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார். வார்தா புயல் வங்க கடலில் உருவாகி உள்ள வார்தா புயல் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:- தென்கிழக்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறியது. அந்த புயலுக்கு வார்தா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தென் கிழக்கில் 1,060 கிலோ மீட்டர் தூரத்திலும், அந்தமானில் இருந்து 240 கிலோ மீட்டர் தூரத்திலும், நிக்கோபார் தீவில் இருந்து வடமேற்கில் 360 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. 12-ந் தேதி கரையை கடக்கும் அந்த புயல் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து ஆந்திர கடற்கரையில் நெல்லூருக்கும் காக்கிநாடாவுக்கும் இடைய 12-ந் தேதி பகலில் கரையை கடக்கும். அப்போது அந்த பகுதியில் கனமழை பெய்யும். இதையொட்டி நாளை (சனிக்கிழமை) முதல் மீனவர்கள் யாரும் ஆந்திர மாநிலம் அருகே உள்ள கடல் பகுதிக்கு செல்லவேண்டாம். 11-ந் தேதி மாலை முதல் காற்று வழக்கத்தை விட அதிக வேகத்தில் வீசும். 2 நாட்களுக்கு மிதமான மழை அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்திலும், புதுச்சேரியிலும் குறிப்பிடும்படி மழை பெய்ய வாய்ப்பில்லை. ஓரிரு இடங்களில் 2 நாட்கள் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். புயல் பாதையை வானிலை மைய அதிகாரிகள் கண்காணித்து வருகிறோம். மேலடுக்கு சுழற்சி ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம். தமிழக கடலோரப் பகுதியில் காற்று மண்டலத்தில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகி இருந்தது. அது வலு இழந்துவிட்டது. இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார். புயல் எச்சரிக்கை 2-ம் எண் கூண்டு ஏற்றம் வார்தா புயல் உருவானதைத் தொடர்ந்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வரும் சரக்கு கப்பல்களுக்கு புயல் சின்னம் குறித்து அறிவிக்கும் வகையில் நேற்று காலை 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. துறைமுகத்துக்கு வந்த கப்பல்கள் நடுக்கடலில் நங்கூரம் இட்டு நிறுத்தப்பட்டு உள்ளன. மேலும் தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவித்து நேற்று 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. எண்ணூர் துறைமுகம் நாகை துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு புயல் சின்னம் குறித்து அறிவிக்கும் வகையில் நேற்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. நேற்று மாலை மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளி கிராமத்தில் உள்ள எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

No comments:

Post a Comment