வர்தா' புயல் நாளை (12.12.2016) பிற்பகல் சென்னை அருகே கரையை கடக்க உள்ளதால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர வட்டங்களில் செயல்படும் பள்ளி, கல்லுாரிகளுக்கும் , கடலுார் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்தா' புயல் நாளை (12.12.2016) பிற்பகல் சென்னை அருகே கரையை கடக்க உள்ளதால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர வட்டங்களில் செயல்படும் பள்ளி, கல்லுாரிகளுக்கும் , கடலுார் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.|4 மாவட்டங்களிலும் தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. கடலுார் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடக்கவிருந்த பள்ளி அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வர்தா' புயல் தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் இன்று மாலை அளித்த பேட்டியில் கூறியதாவது:     வங்கக் கடலில் உருவான 'வர்தா' புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. இது சென்னையில் இருந்து 370 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 18 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. அப்பகுதியில் மணிக்கு சுமார் 140 கி.மீ வேகத்தில் காற்று வீசுகிறது. இது, நாளை (திங்கள்) பிற்பகலில், வடக்கு தமிழகத்தின் கடலோரப் பகுதியில் சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கக்கூடும். அப்போது மணிக்கு 60 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதன் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தொடங்கி, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் மழை பெய்யக்கூடும். படிப்படியாக இந்த மழையின் அளவு அதிகரித்து நாளை (திங்கள்கிழமை) காலை முதல் அடுத்த நாள் காலை வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கன மற்றும் அதிகனமழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதன்காரணமாக, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர வட்டங்களில் செயல்படும் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களிலும் தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. கடலுார் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடக்கவிருந்த பள்ளி அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment