நீதித்துறையில் 1,344 புதிய பதவிகள் உருவாக்க ஒப்புதல் ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

நீதித்துறையில் 1,344 புதிய பதவிகள் உருவாக்க ஒப்புதல் ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் | தமிழக நீதித்துறையில் 1,344 புதிய பதவிகளை உருவாக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. கூடுதல் செலவு விடுமுறை நாட்களில் நடக்கும் 'லோக் அதாலத்களில்' பணியாற்றும் கோர்ட்டு ஊழியர்களுக்கு உரிய பண பலன்களை வழங்கவும், நீதித்துறை ஊழியர்களுக்கு சம்பளம் உள்ளிட்டவை குறித்து ஷெட்டி கமிஷன் செய்துள்ள பரிந்துரைகளை அமல்படுத்தவும் தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு நீதித்துறை அமைச்சு பணி அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகி ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. கூடுதல் பதவிகள் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா பதில் மனு தாக்கல் செய்தார். அதில், நீதித்துறைக்கு கூடுதலாக ஆயிரத்து 344 பதவிகளை உருவாக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுசம்பந்தமான கோப்புகள் சம்பந்தப்பட்ட அதிகாரியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான பணிகள் வருகிற 31-ந்தேதிக்குள் முடிந்து விடும்' என்று கூறியிருந்தார். அதேபோல, வீட்டு வசதித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'வீட்டு வசதி வாரியம் ஒதுக்கும் மொத்த வீடுகளில், 15 சதவீதம் நீதித்துறை ஊழியர்களுக்கு ஒதுக்கப்படும்' என்று கூறப்பட்டது. முன்னுரிமை இதை பதிவு செய்துகொண்ட தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், அரசு வீடுகள் ஒதுக்கீட்டில் நீதித்துறை ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும்' என்று கூறி விசாரணையை ஜனவரி 6-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment