வங்கியில் 1439 பணியிடங்கள்

வங்கியில் 1439 பணியிடங்கள் | பிரபல பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பரோடா வங்கி. தற்போது இந்த வங்கியின் பல்வேறு கிளைகளில் ஏவல் பணியாளர் (பியூன்) மற்றும் துப்புரவு பணியார் (ஸ்வீப்பர்) பணிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தெற்கு குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளடங்கிய பகுதிகளில் 684 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை தவிர வடமாநில கிளைகளில் 755 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிளைகள் வாரியான பணியிட விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு அந்தந்த மண்டலத்தில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., .பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தரவரிசைப் பட்டியல் மற்றும் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ரூ.400 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் 100 மட்டும் செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மண்டல பணிகளுக்கு 16-12-2016-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வட மாநில மண்டலத்தில் சில கிளை பணிகளுக்கு 13-12-2016-ந் தேதிக்குள்ளும், சில கிளைகளுக்கு 15-12-2016-ந் தேதிக்குள்ளும் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இவை பற்றிய விவரங்களை www.bankofbaroda.com என்ற இணையதளத்தில் முழுமையாக பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

 

No comments:

Post a Comment