அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,591 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு அனுமதி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,591 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு அனுமதி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு | அரசு மேல்நிலைப் பள்ளிக ளில் புதிதாக 1,591 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங் களை தோற்றுவிக்க பள்ளிக் கல்வித்துறைக்கு அனுமதி அளிக் கப்பட்டுள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீதம் நேரடி நியமனம் மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. நேரடி நியமனத்துக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வு நடத்துகிறது. கடந்த 2015-16-ம் கல்வி ஆண்டில் 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்ப அரசு அனுமதி அளித்தது. இதற் கான போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த நேரத்திலும் வெளியிடலாம் என்ற சூழல் நிலவுகிறது. ஆசிரியர் மாணவர் விகிதாச் சாரத்தின் அடிப்படையில் புதிதாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க பள்ளிக்கல்வித்துறை அரசிடம் அனுமதி கேட்டிருந்தது. இந்த நிலையில், அனைத்து மாவட் டங்களிலும் சேர்த்து 1,591 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை புதிதாக தோற்று விக்க அரசு அனுமதி அளித்துள் ளது. இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வித்துறையின் முதன் மைச் செயலாளர் டி.சபீதா வெளி யிட்டுள்ளார். அதன்படி, தமிழ் பாடத்தில் 476, ஆங்கிலத்தில் 154, கணி தத்தில் 71, இயற்பியலில் 119, வேதியியலில் 125, வரலாறில் 73, பொருளாதாரத்தில் 166, வணிகவிய லில் 99 என புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதிக பட்சமாக தமிழ் பாடத்தில்தான் அதிக பணியிடங்கள் (476) தோற்றுவிக்கப்பட்டுள்ளது. புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 1,591 முதுகலை பட்டதாரி பணி யிடங்களில் 50 சதவீதம் பதவி உயர்வுக்கும், எஞ்சிய 50 சதவீத இடங்கள் நேரடி நியமனத்துக்கும் ஒதுக்கீடு செய்யப்படும். அதன்படி, நேரடி நியமனத்துக்கு சுமார் 800 இடங்கள் ஒதுக்கப்படலாம். ஏற்கெனவே நேரடி நியமனத்துக்கு ஒதுக்கப்பட்ட காலியிடங்களான 1,062 இடங்களுக்கான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படாததால், தற்போது புதிதாக உருவாகியுள்ள இடங்களையும் (800) சேர்த்து நேரடி நியமனம் மூலம் நிரப்பும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிப்பு வெளியிடலாம் என தெரிகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பை எதிர்பார்த்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரிகள் காத்திருக்கி றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளிக்கக் கூடிய தனியார் பயிற்சி மையங் களும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பை எதிர்பார்த்துக் கொண் டிருக்கின்றன.

Comments