SCROL

Monday, December 26, 2016

தமிழகத்தில் 17 துணை சூப்பிரண்டுகள் கூடுதல் சூப்பிரண்டுகளாக பதவி உயர்வு


தமிழகத்தில் 17 துணை சூப்பிரண்டுகள் கூடுதல் சூப்பிரண்டுகளாக பதவி உயர்வு | தமிழகத்தில் 17 துணை சூப்பிரண்டுகள் கூடுதல் சூப்பிரண்டுகளாக பதவி உயர்வு பெற்றனர். இதுதொடர்பாக அரசு நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:-

* திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு ஆர்.கணேசன், திருச்சி மாவட்ட கூடுதல் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.

* கிருஷ்ணகிரி மதுவிலக்கு 2-ம் நிலை கூடுதல் சூப்பிரண்டாக பணியாற்றிய எஸ்.ஆறுமுகசாமி, முதல்நிலை கூடுதல் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றார். இவர் தர்மபுரி மாவட்ட மதுவிலக்கு முதல்நிலை கூடுதல் சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.

* தஞ்சை ஊழல் தடுப்பு கண்காணிப்பு 2-ம் நிலை கூடுதல் சூப்பிரண்டு ஜெ.ரத்தினவேல், முதல்நிலை கூடுதல் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றார். இவர் தஞ்சை மாவட்ட தலைமையிட கூடுதல் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

* சேலம் நகர குற்ற ஆவண பிரிவு உதவி கமிஷனர் சி.பி.கந்தசாமி, முதல்நிலை கூடுதல் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றார். இவர் சேலம் மாவட்ட தலைமையிட கூடுதல் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* திருப்பூர் மாவட்டம் காங்கேயம் துணை சூப்பிரண்டு எம்.சந்தானபாண்டி, முதல்நிலை கூடுதல் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றார். இவர் ஈரோடு மாவட்ட தலைமையிட கூடுதல் சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.

.வி.மதி

* திருப்பத்தூர் கியூ பிரிவு சி..டி.யில் துணை சூப்பிரண்டாக உள்ள கே.சுரேஷ்குமார், கூடுதல் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றார். சேலம் மாவட்ட மதுவிலக்கு பிரிவுக்கு கூடுதல் சூப்பிரண்டாக அவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

* சென்னை மருத்துவ மற்றும் சுகாதாரப்பிரிவு விஜிலென்ஸ் துணை சூப்பிரண்டு கே.ஜி.நரசிம்ம வர்மன், கூடுதல் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று, மதுரை மாவட்ட தலைமையிடத்தில் நியமிக்கப்பட்டு உள்ளார்.

* சென்னை மெட்ரோ குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு எம்.பிரபாகரன், கூடுதல் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றார். அவர் சி.பி.சி..டி. சிறப்பு புலனாய்வு பிரிவு கூடுதல் சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.

* சென்னை ஆவின் கண்காணிப்பு துணை சூப்பிரண்டு இரா.ரத்தினவேலு, கூடுதல் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று, சிவகங்கை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார்.

* திருச்சி மாவட்ட குற்ற ஆவண பிரிவு துணை சூப்பிரண்டு .வி.மதி, கூடுதல் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று, விருதுநகர் மாவட்டத்தில் நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஜி.சங்கரலிங்கம்

* மதுரை மாவட்ட .எல்.ஜி.எஸ்.சி. பிரிவு துணை சூப்பிரண்டு .தங்கவேலு, கூடுதல் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றார். அவர் பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் நியமிக்கப்பட்டு உள்ளார்.

* தஞ்சை நகர துணை சூப்பிரண்டு இளங்கோவன், பதவி உயர்வு பெற்று நாகை மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* சென்னை கிண்டி உதவி கமிஷனர் ஜி.சங்கரலிங்கம், பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டம் கூடுதல் சூப்பிரண்டாக மாற்றப்பாட்டார்.

* சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை துணை சூப்பிரண்டு டி.கருப்பசாமி, பதவி உயர்வு பெற்று நாகை மாவட்ட கூடுதல் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.

* சென்னை எஸ்.ஆர்.எம்.சி. உதவி கமிஷனர் கே.பரந்தாமன், கூடுதல் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றார். இவர் திருவாரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஜி.முருகேசன்

* கோவை மாவட்ட ஊழல் தடுப்பு துணை சூப்பிரண்டு ஜி.முருகேசன் கூடுதல் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றார். இவர் நெல்லை சி..டி. கியூ பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

* விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி துணை சூப்பிரண்டு வி.மதிவாணன், கூடுதல் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று, கடலூர் மாவட்டத்தில் பொறுப்பு ஏற்பார்.

 இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment