அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (2.12.2016) நடைபெற இருந்த பொறியியல் தேர்வுகள் ரத்து

அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (2.12.2016) நடைபெற இருந்த பொறியியல் தேர்வுகள் ரத்து | அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:- கனமழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 துறைகளிலும் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற இருந்த பருவ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. அந்த தேர்வுகள் நடத்தப்படும் நாள் குறித்த அறிக்கை பின்னர் வெளியிடப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment