அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் 3 மாதத்தில் உரிய முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் 3 மாதத்தில் உரிய முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தொழிற் கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக 3 மாதங் களில் முடிவெடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தொழிற்கல்வி ஆசிரியரான என்.சம்பத் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதா வது: சுய வேலை வாய்ப்பை உருவாக் கவும், வேலை வாய்ப்புகளை பெருக்கவும், பள்ளி இடைநிற்றலை தவிர்க்கவுமே மத்திய அரசு சார்பில் மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற் கல்வி பாட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1978-ல் விவசாயம், மனையியல், வணிக வியல், பொறியியல் தொழி்ல் நுட்பம் என பல்வேறு பாடப் பிரிவுகளில் ஆரம்பத்தில் தொழிற் கல்வி பாடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பின்னர் நிரந்தரமாக்கப் பட்டனர். அதன்பிறகு தொழிற்கல்வி பாடங்களை மறுஆய்வு செய்து சீரமைப்பதற்காக உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு தொழிற்கல்வி பாடங்கள் அனைத்தும் 9 ஒருங் கிணைந்த புதிய பிரிவுகளாக மாற்றி யமைக்கப்பட்டன. ஆனால் 2009-ல் இருந்து இப்பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்கள் நிரப்பப் படவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடங் களில் மாணவர்கள் சேருவதற்கு விருப்பம் காட்டுவதில்லை. பல பள்ளிகளில் இந்தப் பாடப்பிரிவு களே மூடப்பட்டுவிட்டன. காலியிடங்களை நிரப்பக்கோரி தொடர்ச்சியாக பல மனுக்கள் அளித்தும் இதுவரை கல்வி்த்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தமிழகம் முழுவதும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளில் நிரப்பப்படாமல் காலியாக விடப்பட்டுள்ள ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களை உடனடி யாக நிரப்ப உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார். கல்வித் துறைக்கு உத்தரவு இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது நீதிபதிகள், '' தமிழகம் முழுவதும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளில் எத்தனை மாணவர்கள் சேர்ந்துள்ளனர்? அதுபோல இப்பாடப்பிரிவுகளில் போதுமான ஆசிரியர் பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா? என்ற விவரத்தை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மதிப்பீடு செய்ய வேண்டும். அதுபோல காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக மனுதாரரின் மனுவை பரிசீலித்து 3 மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும்" என பள்ளிக்கல்வித்துறைச் செயலர் மற்றும் பள்ளி தொழிற்கல்வி இயக்குநருக்கு உத்தரவிட்டனர்.

 

No comments:

Post a Comment