ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். மெயின்தேர்வு நாளை (3.12.2016) நடக்கிறது

..எஸ், .பி.எஸ். மெயின்தேர்வு நாளை நடக்கிறது | ..எஸ்., .பி.எஸ்., .ஆர்.எஸ். உள்ளிட்ட 24 வகை அகில இந்திய பணிகளுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்..) நடத்தி வருகிறது. இந்த வருடம் மொத்தம் 1,079 பணிகளுக்கு முதல் நிலை தேர்வை நாடு முழுவதும் இருந்து 9 லட்சம் பேர் எழுதினார்கள். தமிழகத்தில் இருந்து 17 ஆயிரம் பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு கடந்த செப்டம்பர் மாதம் 16-ந்தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் 15 ஆயிரத்து 445 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்கள் அனைவரும் மெயின் தேர்வை எழுத தகுதி பெற்றவர்கள். மெயின் தேர்வு நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி, காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி, அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வி நிறுவனம் ஆகியவற்றில் நடக்கிறது. நாளை கட்டுரைத்தேர்வும், 5 மற்றும், 6-ந்தேதி பொது அறிவு தேர்வுகளும், 7-ந்தேதி தமிழ் மற்றும் ஆங்கில கட்டாயத்தேர்வும் நடத்தப்படுகிறது. 9-ந்தேதி விருப்ப பாட தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வுகள் அனைத்தும் காலையிலும், மாலையிலும் நடத்தப்படுகிறது.

 

No comments:

Post a Comment