SCROL

Thursday, December 29, 2016

பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கான காலக்கெடு நாளையுடன் முடிகிறது


பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கான காலக்கெடு நாளையுடன் முடிகிறது | செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கான காலக்கெடு நாளையுடன் முடிகிறது. நெருக்கடி கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக ஏற்கனவே புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த மாதம் 8-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்தார். மேலும் பொதுமக்கள் கையில் இருக்கும் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் கையிருப்பு வைத்திருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் கொடுத்து மாற்றி வந்தனர். அதுவும் உச்சவரம்பாக தனிநபர் ஒருவருக்கு ரூ.4 ஆயிரம் வரை மட்டுமே மாற்றித்தரப்படும், ஆதார் அடையாள அட்டை அவசியம் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளானார்கள். காலக்கெடு முடிகிறது நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்பு பணத்தை மாற்றுவதற்கு கூட நாள் கணக்கில் வங்கி வாசல்களில் வேலைகளை விட்டுவிட்டு பொதுமக்கள் காத்துக்கிடந்தனர். டிசம்பர் 30-ந் (நாளை) தேதியோடு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவது நிறுத்தப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற இன்னும் ஒரு நாளே உள்ளது. 30-ந் தேதிக்கு பின்னர் பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பது விதியை மீறிய செயலாகும். மேலும் அதன் பிறகு மாற்றுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் தங்கள் கையிருப்பில் வைத்துள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். நாளையுடன் காலக்கெடு முடிவதால் வங்கிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் வங்கிகளில் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கியில் மாற்றலாம் அதே சமயத்தில் ரிசர்வ் வங்கியில் பழைய ரூபாய் நோட்டுகளை மார்ச் மாதம் 31-ந் தேதி வரை மாற்றலாம். ரூபாய் நோட்டுகள் குறித்த ஆவணங்களையும், எதன் அடிப்படையில் பழைய ரூபாய் நோட்டுகள் கிடைத்தது என்பதற்கான ஆவணங்களையும் சமர்ப்பிக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதம் 31-ந் தேதிக்கு பின்னர் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வைப்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. முடங்கிய ஏ.டி.எம். எந்திரம் இதற்கிடையே கடந்த 50 நாட்களுக்கும் மேலாக சென்னையை பொறுத்தமட்டில் 80 சதவீதத்துக்கு அதிகமான ஏ.டி.எம். எந்திரங்கள் மூடியே கிடக்கின்றன. இதனால் வங்கி கணக்கில் போதுமான அளவு பணம் இருந்தும் எடுக்க முடியாமல் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதேபோல மாதக்கடைசி என்பதால் சிலருடைய வங்கி கணக்கில் ரூ.2 ஆயிரத்துக்கும் குறைவான தொகை இருப்பு உள்ளது. ஆனால் பணம் இருக்கும் சில ஏ.டி.எம். எந்திரங்களிலும் ரூ.2 ஆயிரம் புதிய ரூபாய் நோட்டு மட்டும் வருவதால், அவர்களால் வங்கி கணக்கில் இருப்பு உள்ள தொகையை கூட எடுக்க முடிவதில்லை. பிறக்க உள்ள புத்தாண்டில் தற்போது நிலவும் பணப்பிரச்சினை தீர்ந்து இயல்பு நிலை திரும்பவேண்டும் என்பதே பொதுமக்களின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:

Post a Comment